உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரபுரநாதர் கோவிலில் ஆடிப்பூர விழா

கரபுரநாதர் கோவிலில் ஆடிப்பூர விழா

உத்தமசோழபுரம்: ஆடிப்பூர திருவிழாவையொட்டி, கரபுரநாதர் கோவிலில், மனோன்மணி தேவிக்கு, சிறப்பு வளையல் காப்பு அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி, நாளை மாலை, 5 மணிக்கு மனோன்மணி தேவிக்கு, வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அதைத்தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடக்கும். இரவு, ஆடிப்பூர சிறப்பு பூஜை முடிந்ததும், பக்தர்களுக்கு, அலங்காரம் செய்யப்பட்ட வளையல்கள் வழங்கப்படவுள்ளன. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, வரும், 11ம் தேதி இரவு, குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. அதையொட்டி, காலை, 9 மணிக்கு தட்சணாமூர்த்திக்கு, 108 சங்கு பூஜை, நவக்கிரகங்களுக்கு, நவகலச பூஜை, மதியம், 12 மணிக்கு, குருபெயர்ச்சி பரிகார ?ஹாமம் நடக்கும். மாலையில், பூர்ணாஹூதி செய்து, தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்து, 108 சங்காபி ?ஷகம் செய்யப்படும். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். 12ம் தேதி வரலட்சுமி விரதத்தையொட்டி, 108 கலச பூஜை நடக்கும். அதில் பங்கேற்கும் சுமங்கலி பெண்கள், தலைவாழை இலை, பித்தளை சொம்பு, தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு மற்றும் துளசி பூக்களை கொண்டு வருவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !