ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED :3398 days ago
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழா நடக்கிறது. சேந்தமங்கலம், வளையல்காரத் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா, நாளை (ஆக.,5) நடக்கிறது. வரும், 7ம் தேதி தேதி காலை, 9 மணிக்கு, மகளிர் கஞ்சிக்கலயம், அக்னிசட்டி, பால்குடம் ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, 11 மணிக்கு, பால் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.