எரியோட்டில் கோயில் விழா
ADDED :3362 days ago
எரியோடு: எரியோடு உருதமாலையம்மன் கோயிலில் (5.8.16) வெள்ளிக்கிழமை முன்தினம் இரவு, 18ம் ஆண்டாக ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆவுடையம்மன் சுவாமி கோயில் நீரூற்றுப்பகுதியில் கரகம் பாலித்து, பால் குடங்கள், முளைப்பாரி, மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோயில் வந்தடைந்தது. பால், தேன், பன்னீர். சந்தனம், நெய், பஞ்சாமிர்தம், தயிர், கரும்புசாறு என 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏற்பாட்டினை ரவி, பாண்டி, சுசீந்திரன் தலைமையிலான அமாவாசை சிறப்பு வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.