உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் ஆடிப்பூர விழா ஆண்டாளுக்கு வளைகாப்பு

பரமக்குடியில் ஆடிப்பூர விழா ஆண்டாளுக்கு வளைகாப்பு

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் ஆடிப்பூர விழாவையொட்டிஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளைகாப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

பக்தர்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மகளிர் அமைப்புகள் சார்பில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பரமக்குடி சந்தனமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வளைகாப்பு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆடி வெள்ளியையொட்டி பரமக்குடியில் இருந்து நயினார்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !