அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :3355 days ago
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 35 வது ஆண்டாக, நேற்று லட்சார்ச்சனை விழா நடந்தது. அதையொட்டி நேற்று காலை 7:௦௦00 மணி முதல் இரவு 10:௦00 வரையில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, தொடர்ந்து, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் சிவசுப்ரமணியன், தனி அதிகாரி ஜனார்த்தனன் செய்திருந்தனர்.