திருப்பரங்குன்றத்தில் ஆக. 12ல் 1008 விளக்கு பூஜை
திருப்பரங்குன்றம்: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக. 12, மாலை 6.00 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடக்கிறது. கோயில் உற்சவர் சன்னதி மற்றும் அனைத்து மண்டபங்களிலும் மூன்றரை அடி பித்தளை விளக்குகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் உபயதாரர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும். பூஜையில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மன்னர் கல்லுாரி: ஆக. 12 காலை 9.00 மணிக்கு மாணவர்கள் நலன், உலக நன்மை வேண்டி மாணவியர் பங்கேற்கும் 1008 விளக்கு பூஜைகள் நடக்கிறது. பங்கேற்கும் மாணவியர் விளக்குகளுடன் வரவேண்டும். பூஜை பொருட்கள் கல்லுாரி சார்பில் இலவசமாக வழங்கப்படும் என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.