உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

ஊத்துக்கோட்டை மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

ஊத்துக்கோட்டை: ஆடி மாதத்தை ஒட்டி, மாரியம்மனுக்கு பக்தர்கள் கூழ் சுமந்து சென்று வழிபட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி  ரோஜா தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் கூழ்வார்த்தல் விழா, நேற்று நடந்தது. அப்பகுதியில் உள்ள பெண்கள்  ரெட்டித்தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து, மேளதாளம் முழங்க, கூழ் சுமந்துச் சென்று மாரியம்மனுக்கு படைத்து  வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை, கோழி கறி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள்  அம்மனுக்கு படைக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !