கன்னியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :3350 days ago
திருத்தணி:கன்னியம்மன் கோவிலில், நேற்று நடந்த, இரண்டாம் ஆண்டு தீ மிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் ஏரிக்கரையில் உள்ள கன்னியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவை ஒட்டி, மூலவர் கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி அக்னிகுண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்தது.