உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்குகையில் சாமியார் தியானம்!

மலைக்குகையில் சாமியார் தியானம்!

செஞ்சி:செஞ்சி அருகே மவுன சாமியார் மலைக்குகையில் தியானம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் வள்ளி மலை அருகே உள்ள ஈசன் மலை மீது உள்ள மண்டபத்தில் சில ஆண்டுகளாக சாமியார் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவர் யாருடனும் பேசாமல் இருந்ததால் இவரை பக்தர்கள் மவுனசாமியார் என அழைத்தனர். பக்தர்கள் குறைகளை சொல்லி தீர்வு கேட்ட போது, சைகை மூலமும், வெள்ளை தாளில் எழுதி யும் பரிகாரங்களை சொல்லி வந்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நல்லாண்பிள்ளைபெற்றாள், செத்தவரை கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாமியாரை பார்க்க சென்று வந்தனர். இவர்களில் செத்தவரை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள சப்தகன்னி மலை அடிவாரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட சிவன் கோவில் கட்டி முடிக்காமல் இருப் பதாக தெரிவித்தனர். எனவே செத்தவரை கிராமத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் மவுனசாமியார் செத்தவரை கிராமத்திற்கு வந்தார். இவர் கட்டி முடிக்காமல் உள்ள சிவன் கோவிலை பார்வையிட்டார். இதில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் செடி, கொடி களுக்கிடையே உள்ள குகை ஒன்றில் உட் கார்ந்து தியானம் செய்ய துவங்கினார். இரவானதும் அரை கி.மீ., தூரத்தில் உள்ள பூவாத்தம்மன் கோவில் வளாகத்தில் வந்து தங்கினார். இவருக்கு இங்குள்ள பூவாத் தம்மன் கோவில் பூசாரி சிவஇளங்கோ தொண்டுகள் செய்கிறார். காலை, இரவு என இரண்டு வேலை மட்டும் மவுன சாமியார் டீ அருந்துகிறார். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் குடிக்கிறார். உணவு ஏதுவும் சாப் பிடுவதில்லை. தியானத்தில் இருக்கும் போது யாரையும் சந்திப்பதில்லை. இரவில் பூவாத்தம்மன் கோவிலில் இருக்கும் போது வரும் பக்தர் களுக்கு விபூதி தந்து, குறை களை கேட்டு பரிகாரங்களை வெள்ளை தாளில் எழுதி தருகிறார். இதற்காக எந்த காணிக்கையும் வாங்குவதில்லை.இவர் ஈசன் மலையில் இருந்த போது இவ ரிடம் ஆசி பெற்று வந்த பக்தர்கள், செத்த வரை கிராமத்திற்கும் வரத்துவங்கி உள்ளனர்.ஈசன் மலையில் பக்தர்கள் அதிகம் வருவ தால் தவம் இயற்ற தனிமை தேடி மவுன சாமி யார் இங்கு வந்திருப்பதாக சிவ இளங்கோ கூறினார். மலை குகையில் மவுன சாமியார் தியானத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !