காவல் தெய்வமான கருப்பராயனுக்கு குதிரை வாகனம் சுமந்து ஊர்வலம்
ADDED :3350 days ago
திருப்பூர் :திருப்பூர் அருகே, பாரம்பரியம் மறக்காமல், காவல் தெய்வத்துக்கு சுடுமண் குதிரை சுமந்து வந்து, பக்தர்கள் வாகனம் வழங்கினர். வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராஜகணபதி, கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் சாட்டு பொங்கல் விழாவில், காவல் தெய்வமான கருப்பராயனுக்கு, குதிரை வாகனம் காணிக்கை செலுத்தும் பாரம்பரிய வழக்கத்தை, அப்பகுதியினர் கடைபிடித்து வருகின்றனர். இந்தாண்டு, பொங்கல் விழா, நேற்று முன்தினம் துவங்கியது. சுவாமிக்கு, குதிரை வாகனம், கருப்பராயன் சுடுமண் சிற்பம், கன்னிமார் சிலை ஆகியவற்றø, காவிலிபாளையம் கலைஞர்கள் செய்திருந்தனர். இவற்றை, 2 கி.மீ.,தூரம் பக்தர்கள் சுமந்து சென்று, காணிக்கையாக செலுத்தினர்.