உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி முருகன் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா

கோபி முருகன் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா

கோபி: கோபி முருகன் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி, கோபி பச்சமலை முருகன் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பரிகார ஹோமம் மற்றும் சங்காபிஷேக நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. காலை, 8.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, 12.30 மணிக்கு முடிந்தது. இதில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !