கருப்பனார் சுவாமி கோவிலில் ஆடித்திருவிழா
ADDED :3348 days ago
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கருப்பனார் சுவாமி கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் கருப்பனார் சுவாமிக்கு ஆடித்திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை சுவாமிக்கு அலங்காரம் செய்து, வனத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றனர். மூலவர் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. உலக நலனுக்காக பெண்கள் பிரார்த்தனை செய்து ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். மூன்று வித பூஜைகள் செய்து, இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கருப்பையா சுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், குடிகாட்டில் உள்ள மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.