உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்சிறுவள்ளூரில் தேர்திருவிழா

தென்சிறுவள்ளூரில் தேர்திருவிழா

சின்னசேலம்: தென்சிறுவள்ளூர் நல்லதங்காள், அண்ணமார் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. சின்னசேலம் அடுத்த தென்சிறுவள்ளூரில் உள்ள நல்லதங்காள், அண்ணமார் கோவில் தேர்திருவிழா, கடந்த 8 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தேர்திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் சுவாமியை அலங்கரித்து தேரில் வைத்து, வடம் பிடித்து இழுத்து சென்றனர். மதியம் 3:00 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !