நரசிங்கபுரம் மாரியம்மனுக்கு 14ல் ஜாத்திரை திருவிழா
ADDED :3348 days ago
நரசிங்கபுரம்:நரசிங்கபுரம், மாரியம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி, ஆடி மாத ஜாத்திரை திருவிழா நடைபெற உள்ளது. பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். இங்கு, இந்த ஆண்டு, ஆடி மாத ஜாத்திரை திருவிழா, வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை, 4:00 மணிக்கு, கிராம தேவதை மாரியம்மன் கரகம் கிராம காலனிக்கு செல்லுதல், தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு, மஞ்சள் நீராட்டு, பின், இரவு, 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், அம்மன் வீதிஉலாவும், இரவு, 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.