பட்டாளம்மன் கோவிலில் பானகம் கட்டும் திருவிழா
ADDED :3384 days ago
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள திப்பனூர் பட்டாளம்மள் கோவில் திருவிழா, அடுத்த ஆண்டு ஆடி மாதம் நடக்கிறது. இதை கிராம மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், பானகம் கட்டும் திருவிழா நடந்தது. இதில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அதில் வாழைப்பழம், பொரி ஆகியவை கலந்து, ஒரு குடத்தில் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பானகத்தை, ஒரு பெரிய கொப்பரையில் ஊற்றி, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.