உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைநீர் சேகரிப்பால் நிரம்பிய திருப்புல்லாணி சக்கர தீர்த்தம்!

மழைநீர் சேகரிப்பால் நிரம்பிய திருப்புல்லாணி சக்கர தீர்த்தம்!

கீழக்கரை: திருப்புல்லாணி ஊராட்சியில் 44வது வைணவ திவ்ய தேசமாக விளங்கும் ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலின் முன்புறம் உள்ள சக்கரத்தீர்த்தம் மழைநீர் சேகரிப்பால் இன்று வரை நிரம்பி ரம்மியமாக உள்ளது. சக்கர தீர்த்தம் 6 ஏக்கரில் அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள மதகுக்குட்டம் ஊரணி 12 ஏக்கரில் உள்ளது. தற்போது ஊரணி, குளங்கள் வற்றிய நிலையில் இந்த இரண்டு குளங்களிலும் நீர் உள்ளது. இதனால் பக்தர்கள், நீராடுவதற்கு வசதியாக நிரம்பிய நிலையில் உள்ளது. ஊராட்சித்தலைவர் சுப.முனியசாமி கூறுகையில், ‘மழைக் காலங்களில் வீணாக கடலுக்கு வழிந்தோடும் நீரை, ஒருங்கிணைத்து பாலத்தின் கீழ் தேங்கும் நீரை, பெரிய குழாய்களின் வழியாக ஊராட்சி கிணற்றில் சேகரிக்கிறோம்.  அதன்மூலம் மதகுக்குட்டம் ஊரணியிலும், அதில் இருந்து இணைக்கப்பட்ட குழாயின் மூலம் சக்கரத்தீர்த்தமும் நிரம்புகிறது. ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டம் இன்றுவரை உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை இங்கு ஏற்படுவதில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !