தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :3383 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வினாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. அருகம்புல் மாலை சார்த்தி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். புதுச்சேரி சிவனடியார்கள் சாந்தி ஆனந்தன், மாலதி தலைமையில் திருவாசகம் முற்றோதினர். பூஜையில் தொரவி தொழிலதிபர் சுப்பிரமணி, வழக்கறிஞர் சம்பத், பாலையா, ரவி, ஞானப்பிரகாசம், ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.