கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3383 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதேபோல், சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர், பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.