முத்துமாரியம்மன் கோவில் விழா
ADDED :3384 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட, புத்திரகவுண்டன்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 8 மணிக்கு மூலவர் முத்துமாரியம்மன் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர், பொங்கல் வைத்து, 40க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முத்துமாரியம்மன் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று (18 ம் தேதி) மாலை, 3 மணிக்கு அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. வரும், 20 ம் தேதியன்று, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.