பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா
ADDED :3382 days ago
பரமக்குடி, : பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 24 ம் ஆண்டு ஆவணி பால்குட விழா நடந்தது. ஆக., 8ல் கணபதி ஹோமம், காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மன், சந்தனம், மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபூஜை, ராஜராஜேஸ்வரி, அன்ன பூரணி உள்ளிட்ட அலங்காரத்தில்அருள்பாலித்தார். ஆக., 17 காலை 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால்குடம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜை, தேரில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது.