உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

திருப்பூர் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

திருப்பூர் : பெருந்தொழுவு கரியாம்பாளையம் செல்வ விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன், பொன் ராமர் மற்றும் பரிவாரமூர்த்தி கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன், நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, பாண்டீஸ்வர சாமி கோவிலில் இருந்து, முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து புண்யாகம், வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இன்று, யாக சாலைகள் அலங்கரிக்கப்படுகிறது. நாளை, இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு கண் திறக்கப்படுகிறது. நாளை மாலை, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், 21 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, சாமிக்கு காப்பு கட்டப்படுகிறது. அன்று காலை, 6:45 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 8:00 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை, காப்பு அவிழ்த்தவுடன், விழா நிறைவு பெறுகிறது. வரும், 22ம் தேதி முதல், 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !