குஞ்சிகருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3505 days ago
திருப்புவனம்: குருந்தன்குளம் குஞ்சிகருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. ஞாயிற்றுகிழமை காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சார்யார்கள் சுமந்து வந்து காலை 10.30 மணிக்கு கும்பத்தில் நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை காளையார்கோயில் சோமசுந்தர குருக்கள் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சுராஜன் உள்ளிட்ட கிராமத்தார்கள் செய்திருந்தனர்.