உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரியில் ராகவேந்திரர் ஆராதனை விழா

புவனகிரியில் ராகவேந்திரர் ஆராதனை விழா

புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரர் அவதரித்த மடாலயத்தில் 345வது ஆராதனை விழா நடந்தது.  விழாவையொட்டி கடந்த 19ம் தேதி முதல்,  21ம் தேதி வரை தினமும் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 20ம் தேதி ராகவேந்திரர் வீதியுலா நடந்தது. 21ம் தேதி பிளஸ் 2  பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ, மாணவியர்களுக்கு 10,000 ரூபாய்க்கான காசோலையை ராகவேந்திரர் அறக்கட்டளை  கவுரவத் தலைவர் சுவாமிநாதன் வழங்கினார். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர்  கதிர்வேலு, ரகு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !