உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா: பிரம்மாண்ட பந்தல் அமைப்பு

பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா: பிரம்மாண்ட பந்தல் அமைப்பு

ப.வேலூர்: ப.வேலூர், பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. வரும், செப்.5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவிலில், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலில் இருந்து ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வர். அதையொட்டி, கோவில் பிரகாரங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரங்களில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !