கிருஷ்ண ஜெயந்தி விழா நாமக்கல்லில் கோலாகலம்
நாமக்கல்: நாமக்கல் கடைவீதியில் உள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை, 8 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, கிருஷ்ணன், ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாறுவேடப்போட்டியும் நடத்தப்பட்டது. அதில், கிருஷ்ணர், ருக்மணி வேடம் அணிந்து வந்து, மாணவர்கள் பார்வையாளர்களை அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம் பாண்டுரங்கர், லக்ஷ?மி நாராயண சுவாமி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பாண்டுரங்கர் கோவிலில் கிருஷ்ணர் சிலை கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.