சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர்!
ADDED :3667 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் கோவில் உலா நடந்தது. பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.