திருத்தூதர் மத்தேயு தேர் பவனி விழா
திருவள்ளூர் : கடம்பத்தூர் திருத்தூதர் மத்தேயு திருத்தலத்தில், 41ம் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, ஐம்பெரும் ஆடம்பர தேர் பவனி விழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. இத்தலத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். 41ம் ஆண்டு பெருவிழா கடந்த 17ம் தேதி மாலை 6 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6 மணிக்கு செபமாலை, தேர், திருப்பலி ஆகியவை நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு,பேராயர் டாக்டர் சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. அன்று இரவு 7 மணிக்கு ஐம்பெரும் தேர் பவனி நடந்தது. வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில், கசவநல்லாத்தூரில் இருந்து சர்ச் வரை ஊர்வலமாக இயேசு பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு பங்குத்தந்தை தாமஸ் இளங்கோ மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் பிரான்சிஸ், மூர்த்தி, ரெஜிஸ்ராஜா, பிலிக்ஸ் மார்ட்டின் உட்பட பலர் ஏற்பாடு செய்தனர்.