திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீஆஞ்சநேயர் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆக., 27 மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை விஷ்வசேனா ஆராதனையுடன் கூடிய ஹோம வேள்விகள் நடந்தது. பின், சங்கல்ப பூஜை மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணி மூன்றாம் கால யாக வேள்வி பூஜை துவங்கி, காலை 11:00 மணி வரை நடந்தது. பின், மாலை 4:00 மணி முதல் 9:00 மணி வரை நான்காம் கால யாக பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு வேள்வி பூஜைகள், கலச பூஜைகள், நற்றவவேள்விகள், உற்சவ மூலவர் சக்தி பூட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6:15 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீஅம்மையப்பா பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில்ஆஞ்சநேயர் பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம் நடக்க உள்ளது.