உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிகை என்றால் என்ன? அதில் என்னென்ன செய்யக் கூடாது?

குளிகை என்றால் என்ன? அதில் என்னென்ன செய்யக் கூடாது?

ராகு,கேது கிரகங்கள் போல, குளிகை, மாந்தி என்பவற்றையும் முன்னோர் நிழல் கிரகங்களாக வகுத்தனர். சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டன. குளிகைக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.  மாந்திக்கு, தமிழகத்தில் நேரம் ஒதுக்குவது வழக்கில் இல்லை. ஆந்திரா, கேரளம், கர்நாடகம், வடமாநிலங்களில் வழக்கில் உள்ளது. நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பார்க்கத் தேவையில்லை. தாராளமாக செய்யலாம். பிதுர் (முன்னோர் வழிபாடு) காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்யக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !