ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது!
விருத்தாச்சலம் – திட்டக்குடி சாலையில் 22 கி.மீ., துõரத்திலுள்ள திருவட்டத்துறையில் அருள்புரியும் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் மீது நாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல் இது. இதனைப் பக்தியுடன் படித்தால் எந்த பிரச்னையிலும் தெளிவான முடிவை எடுக்கலாம். ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.
கடவுளைக் கடலுள் எழும் நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாத எம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே
கரும்பு ஒப்பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம்
தொழுவதே.
ஏறொப் பானை எல்லாவுயிர்க்கும் இறை
வேறொப் பானை விண்ணோரும் அறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பரப்பு ஒப்பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பு ஒப்பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
நெய்யொப் பானை நெய்யிற்சுடர் போல்
வதோர்
மெய்யொப் பானை விண்ணோரும்
அறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே
நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே
புனலொப் பானைப் பொருந்தலம் தம்மையே
மினலொப் பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே
பொன்னொப் பானைப் பொன்னறிசுடர்
போல்வதோர்
மின்னொப் பானை விண்ணோரும்
அணிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே
காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானை வல்லோரும்என்று இன்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக் கண்டீர் நாம் தொழுவதே.
கலையொப் பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே.