சென்னகேசவ பெருமாள் கோவில் தேர் பாதுகாக்கப்படுமா?
ADDED :3359 days ago
சங்ககிரி: சங்ககிரி, சென்னகேசவ பெருமாள் கோவில் தேர், பாதுகாப்பின்றி உள்ளது. சங்ககிரி, மலைக்கோட்டையில் உள்ள சென்னகேசவப் பெருமாள் கோவில் தேர் திருவிழா, சித்திரை மாத பவுர்ணமியில் நடக்கும். அந்த கோவில் தேர், சேதம் அடையாமல் இருக்க, பாதுகாப்பு கருதி, இரும்பு தகரம் வேயப்பட்டது. ஆனால், மழை, காற்றால், அந்த தகரம் பெயர்ந்து, தற்போது, பாதுகாப்பற்ற நிலையில், தேர் உள்ளது. மேலும், மழை, வெயிலில் நனைந்து, சக்கரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதே நிலை நீடித்தால், தேர் திருவிழா அன்று, தேரை இயக்க முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இந்து சமய அறநிலையத்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.