உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி ஆலயத்தில் உழைப்பாளர்கள் விழா!

வேளாங்கண்ணி ஆலயத்தில் உழைப்பாளர்கள் விழா!

சென்னை: பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, உழைப்பாளர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, பெசன்ட் நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் 44ம் ஆண்டு பெருவிழா ஆக. 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, உழைப்பாளர்கள் விழா நடத்தப்பட்டது. காலை 5:30 மணிக்கு, முதல் திருப்பலி நடந்தது. நுங்கம்பாக்கம், பங்குத்தந்தை ஸ்டாலின் செபாஸ்டியன் ஆங்கிலத்திலும்,  மணலி, புதுநகர், பங்குத்தந்தை பெலவேந்திரர், தமிழிலும் திருப்பலி நிகழ்த்தினர்.  நேற்று மாலை, செபமாலை, நவநாள் செபம், கூட்டுத்திருப்பலி நடந்தது. போரூர் பங்குத்தந்தை சார்லஸ் குமார், கிறிஸ்தவ கல்லுாரி முதல்வர் செபாஸ்டியன் ஆகியோர் தலைமையில், உழைப்பாளர் விழாவுக்கான கூட்டுப்பாடற் திருப்பலி ஒப்புக் கொள்ளப்பட்டது. உழைப்பாளர்கள், தொழிலாளர்கள் நலனுக்காக சிறப்பு மன்றாட்டு மேற்கொள்ளப்பட்டது. திருப்பலிக்குப் பின், மாதாவின் சிறிய தேர் பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !