மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: மகா கணபதி கோவி லில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் நந்தவனத் தெரு, ஆரிய வைஸ்ய நந்தவனத்தில், மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம் நடந்தது. காலை, 6.10 மணிக்கு, மகா கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, சுவாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 6 மணிக்கு, மூலஸ்தான மகா கணபதி மூர்த்திக்கு, சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு, வாசவி மகளிர் சங்கம் சார்பில், பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இங்கு, கரும்பு தோட்ட தெப்பக்குளத்தில் அன்னை பார்வதியின் மடியில் பால விநாயகர் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டு, சிறப்பு அபி ?ஷகம், வழிபாடு நடத்தப்பட்டது.