உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயத்தேர்த்திருவிழா

கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயத்தேர்த்திருவிழா

வால்பாறை: கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட் வேளாங்கண்ணி மாதா ஆலயம். இந்த ஆலயத்தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி ஆலய பங்கு தந்தைகள் வின்சென்ட்பால்ராஜ், சகாயராஜ், பால்ராஜ், லாரன்ஸ் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் நாள் தோறும் கூட்டுத்திருப்பலியும், ஜெபமாலை வழிபாடும் நடக்கிறது. விழாவில் வரும், 10ம் தேதி இரவு, 8:00 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருமலை பங்குமக்கள் மற்றும் வால்பாறை திருஇருதய ஆலய பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !