உய்யாலிகுப்பம் கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3357 days ago
வாயலுார்:வாயலுார் உய்யாலிகுப்பம், கெங்கையம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் உய்யாலிகுப்பத்தில், கெங்கையம்மன், ஊத்துக்காட்டம்மன், குந்தாலம்மன், கற்பக விநாயகர், பாலமுருகன் ஆகியோர் கோவில்கள் ஒருங்கிணைந்து உள்ளன. இக்கோவில்கள், 12 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டு, நேற்று மகா கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை கிராம தேவதை, கணபதி வழிபாடு, நவக்கிரக ஷோமம், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன சாற்றுதல் நடந்தன. அதைத்தொடர்ந்து, நேற்று காலை யாகசாலை வழிபாட்டிற்கு பின், அனைத்து சன்னிதிகளின் கலசங்களிலும் புனித நீரூற்றி, மகா கும்பாபிஷேகம், சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. அப்பகுதி மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.