மூன்றடி மண் கேட்டது ஏன்?
ADDED :3355 days ago
மண்ணில் நான்கு விதமானவர்கள் வாழ்கிறார்கள். பிறரையும் துன்புறுத்தி தானும் துன்பப்பட்டு கிடப்பவன் அதமா அதமன். பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ்பவன் அதமன். பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்பவன் மத்திமன். தன்னையே கொடுத்து பிறரை வாழ வைப்பவன் உத்தமன். இந்த நான்கில் நல்லவனான ‘உத்தமன்’ என்னும் பிரிவில் வாமனர் இருக்கிறார். மகாபலியிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டது இழிவான செயல் என்றாலும், தனக்காக இல்லாமல் உலக நன்மைக்காக யாசகம் கேட்டார் பெருமாள். இவரை ஓணத்திருநாளன்று பூக்கோலமிட்டு வழிபாடு செய்தால் சகல நன்மையும் கிடைக்கும்.