கரிவரதராஜபெருமாள் கோவிலில் பஜனோத்ஸவம்
ADDED :3308 days ago
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பஜனோத்ஸவம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோவில் கும்பாபிஷேகம் செப்., 4ல் நடந்தது. தற்போது, ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது பிறந்தநாள் நிறைவையொட்டி, கோவில் வளாகத்தில் தினந்தோறும் மாலை பஜனோத்ஸவம் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஜனை குழுவினர் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதன் நிறைவு நாளான வரும் 16ல் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், வேள்வி வழிபாடு நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் கரிவரதராஜ பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.