உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் கட்டணம் உயர்வு: விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு

கோயிலில் கட்டணம் உயர்வு: விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு

பழநி: பழநி திருஆவினன்குடிகோயிலில் அபிஷேகம், சிறப்புவழி கட்டணத்தை உயர்த்த கூடாது என விஸ்வ இந்துபரிஷத் தெரிவித்துள்ளது.

மூன்றாம்படைவீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் கால பூஜையில் பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட அனைத்துவகை அபிஷேக கட்டணம் ரூ.50ம், காலபூஜை சிறப்புவழி கட்டணம் ரூ.50 ஆக உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டு இதுகுறித்து பக்தர்கள் ஆட்சேபனையை வரும் அக்.,5க்குள் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இதற்கு விஸ்வஇந்துபரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் வியாபாரநோக்கத்தில் தரிசனம், காலபூஜை, காதுகுத்தல் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக கோயில்நிர்வாகத்திற்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பியுள்ளோம். கட்டணஉயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நகரசெயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !