அம்பாளின் லிங்க உருவம்
ADDED :3420 days ago
சிவனின் தலையில் தான் கங்காதேவியை தரிசித்துஇருப்பீர்கள். ஆனால், கோவை உக்கடம் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கையின் தலையில் சிவபெருமானின் திருஉருவம் உள்ளது. சிவனையே தாங்குபவள் என்பதால், இவளுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்றாகிறது. இவளிடம் பக்தியுடன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள், கிரக தோஷங்களையெல்லாம் தாண்டி வெற்றி பெறும். உதாரணமாக, சர்ப்ப தோஷத்தால் திருமணம், மகப்பேறு தடைபடுமானால் இவளைவணங்கி நிவாரணம் பெறலாம்.