திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் புரட்டாசி கிருத்திகை விழா
ADDED :3344 days ago
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி, சரவணப்பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வள்ளி, தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாட வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.