உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் 1ம் தேதி தன்வந்திரி ஹோமம்!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் 1ம் தேதி தன்வந்திரி ஹோமம்!

கடலுார்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஸ்ரீசுத்த சுதர்சன தன்வந்திரி நவராத்திரி சுவாதி ஹோமம், வரும் 1ம் தேதி துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசங்குப்பம் அமிர்தவல்லி நாயகி சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஸ்ரீசுத்த சுதர்சன தன்வந்திரி நவராத்திரி சுவாதி ஹோமம் வரும் 1ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை, நடக்கிறது. தினமும் காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரையும் இரு வேளையில் நடக்கும் சிறப்பு ஹோமத்தில் ஒரு லட்சம் ஸ்ரீசுத்த மூலமந்திரம் படிக்கப்படுகிறது. 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. சிறப்பு ஹோமத்தில் 2 டன் பழ வகைகள், ஒரு டன் நெய், கொப்பரை தேங்காய், மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. தினமும் மூலவர் பெருமாள் தங்க கவசத்தில் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி, கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !