கோவிலில் உற்சவர் சிலைகளை பஞ்சலோகத்தில் செய்வது ஏன்?
ADDED :3342 days ago
மூலஸ்தானத்தில் கற்சிலை இருக்கவேண்டும் எனவும், அதனை பிரதிஷ்டை செய்யும் போது அசையாமல் இருத்தி வைக்க அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாத்தப்படவேண்டும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. எனவே கற்சிலைகள் உற்சவ புறப்பாட்டிற்கு ஏற்புடையவையல்ல என்பது புரிகிறது. அதுபோல வீதி வலம் வரும் சுவாமி விக்ரகங்களை (உற்சவர்கள்) பஞ்ச லோகத்தில் செய்ய வேண்டும் எனவும் அவை கூறுகின்றன. சலபேரம்’ என சிற்ப சாஸ்திரம் உற்சவ விக்ரகங்களைக் குறிப்பிடுகிறது. இதற்கு அசையும் விக்ரகம்’ என்று பொருள். ஆகமங்களில் சொல்லியுள்ளபடி உற்சவர் சிலைகள் பஞ்சலோகத்தில் செய்யப்படுகின்றன.