சுயலாபம் பாராதீர்!
ADDED :3401 days ago
ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு சக்தியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். தானம் கொடுக்கும்போதே, “பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன். என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள்,” என்றோ, “நான் செய்த உதவியை மறந்து விட்டாயே,” என்று சொல்லிக் காட்டுவதோ கூடாது. அதாவது தர்மத்தின் பெயரால் சுயலாபம் அடைய விரும்பினால், தர்மம் செய்ததன் பலனை அடைய முடியாது.