இரட்டை பிள்ளையார் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3381 days ago
வாடிப்பட்டி, வாடிப்பட்டி இரட்டை பிள்ளையார் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முகுந்தாச்சாரியார் பக்தி சொற்பொழிவாற்றினார். அகண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது. முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண உபன்யாசம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.