சுயம்பீஸ்வரர் சமேத அபிராமி கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :3329 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதி சுயம்பீஸ்வரர் சமேத அபிராமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. மழை வேண்டி நந்தி சிலைக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். சிவாச்சாரியார் உதயகுமார் உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.