மழை பெய்ய வேண்டி ஒப்பாரி வைத்து வழிபாடு
ADDED :3329 days ago
வடமதுரை: துாங்கனம்பட்டி கிராமத்தில் மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள் தொடர்ந்து 3 நாட்கள் ஒப்பாரி வைத்து வினோத வழிபாடு நடத்தினர். பாகாநத்தம் ஊராட்சி துாங்கனம்பட்டி மற்றும் எரியோடு பேரூராட்சி சின்னக்குட்டிபட்டி கிராமங்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் கிராமம் முழுவதும் சென்று உணவை பிச்சையாக பெற்று வந்தனர். பின்னர் து ாங்கனம்பட்டி மந்தையிலுள்ள காளியம்மன் கோயில் முன்பாக எரியோடு திருவருள் பேரவை செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் பிச்சை எடுத்து வந்த உணவை, கலந்து கலவையாக்கி அனைவரும் சாப்பிட்டனர். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் இரவு நேரத்தில் இத்தகைய வழிபாடை நடத்தினர்.