திருத்தணி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3483 days ago
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் செப்.,30, புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை ஒட்டி, மூலவருக்கு, 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்துாரில் உள்ளது. இக்கோவிலில் செப்.,30, புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு வண்ண மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, மீண்டும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர்.