உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம்

அனுப்பர்பாளையம் கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அவிநாசி மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள கோவில்களில், முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

புரட்டாசி மாத, மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு, தர்ப்பண சடங்கு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பலரும், பங்கேற்று, முன்னோருக்கு "திதி கொடுத்தனர். ஒரு சிலர், நொய்யல் கரையோரம் பூஜை நடத்தினர். திருப்பூர், போயம் பாளையம் மஹாவிஷ்ணு சேவா சங்கம் சார்பில், திருப்பூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் இறந்து கிடக்கும் ஆரவற்ற சடலங்களை போலீஸ் அனுமதியுடன் சடங்குகள் செய்து முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூர், செங்கப்பள்ளி, பல்லடம். ஊத்துக் குளி, சோமனூர், உள்ளிட்ட பகுதியில், 200 சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். நேற்று மகாளய அமாவாசை என்பதால், ஆதரவற்று இறந்தவர்களின், ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்தது. பாராயணம் பாடி, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் தீபா, செயலாளர் தனபால், செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !