சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி வழிபாடு!
ADDED :3289 days ago
திண்டுக்கல்: சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி வழிபாடு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் ஆஞ்சநேயருக்கு திருப்பதி பெருமாள் அலங்காரம், சஞ்சீவி மலையை தூக்குவது போன்ற அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரினம் செய்தனர். இனி வரும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும் வெவ்வேறு அலங்காரங்களில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.