அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :3287 days ago
ஆர்.எஸ்.மங்கலம், :ஆர்.எஸ்.மங்கலம் அருகே வ.பரமக்குடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கடம் ஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதியம் அன்னதானம் நடந்தது.